25 நவ., 2014

தெடாவூர் அரசுப் பள்ளி ஆண்டு விழா

கெங்கவல்லி வட்டத்தில் உள்ள  தெடாவூர் அரசு உயர்நிலைப்
பள்ளி ஆண்டு விழா வெள்ளிக்கிழமை (12.01.2014)
நடைபெற்றது.
பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஆசைதம்பி தலைமை
வகித்தார். தொழிலதிபர் தங்கவேல், தெடாவூர் பேரூராட்சி
துணைத்தலைவர் சுப்பிரமணி, செயல் அலுவலர் நந்தக்குமார்
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  பள்ளியின் தலைமை
ஆசிரியர் கணேசன் வரவேற்றார். உதவித் தலைமை
ஆசிரியை செல்வி ஆண்டறிக்கை வாசித்தார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்வில் 10 ஆம் வகுப்பு தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 

மாணவர்கள் முன்னேற்றத்துக்கு பெரிதும்
காரணம் பெற்றோர்களா? ஆசிரியர்களா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.
பின்னர், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 150 திருக்குறளை
ஒப்பித்த 8 ஆம் வகுப்பு  மாணவர் கிருஷ்ணகுமாருக்கு
கோப்பையும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

                              பெரிய தேரும் சிறிய தேரும்                        ஆற்றில் மீன் பிடிக்கும் சிறுவர்கள்                               ஆற்றைக்கடக்கும் பாதசாரி
                       பச்சைமலையின் வடக்குபுறத்தோற்றம்


காலைப்பனியில் மணக்காட்டிலிருந்து தெடாவூருக்கு பயணிக்கும்  மனிதர்